புத்தகத்தை பார்த்து தேர்வெழுதலாம்- சிபிஎஸ்இ அதிரடி
Aug 11, 2025, 19:32 IST1754920947885
9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வி அமர்விலிருந்து 9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவிகு சிபிஎஸ்இ ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப்படும் மூன்று எழுத்துத் தேர்வுகளில் மொழி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு இந்த முறை பொருந்தும். அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் சிபிஎஸ்இ தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர். இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு பிறகு 2017ல் கைவிடப்பட்டது.

