சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

 
result

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது.

CBSE Class 10, 12 Board Exam 2022 Term 1 result expected this week? Know  BIG update here


நாடு முழுவதும் இன்று காலை 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. www.cbse.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 21.86 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.60 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.48% பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 99.30 சதவீதத்துடன் சென்னை மண்டலம் 3ம் இடம் பிடித்துள்ளது.