பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

 

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சதித் திட்டத்திற்கு பின்னாலிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ், மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இந்த நிலையில் பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல் ஷர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நிபுணர் குழுவை அமைத்து என்னென்ன தகவல்கள் திருடப்பட்டன? இதில் உடந்தையாக இருந்தது யார்? நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது.