விராட் கோலி ஹோட்டலில் நள்ளிரவு 1.30 மணிக்கு என்ன நடந்தது? பறந்து சென்ற பெங்களூர் போலீஸ்

 
Case filed against Virat Kohli's hotel

பெங்களூரில் விராட் கோலிக்கு சொந்தமான பப் மீது போலீசார் வழக்கு பதிவு - அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

One8Commune

விராட் கோலியின் One8 கம்யூன் டெல்லி, மும்பை, புனே, பெங்களூர் மற்றும் கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் இயங்கி வருகிறது. இதில் பெங்களூரில்,  எம்ஜி சாலையில் உள்ள ரத்னம் காம்பிளக்ஸில் ஆறாவது மாடியில் செயல்பட்டும் பப் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் இந்த பப்களில் பாடல்கள் போடப்படுவதால் தங்களால் நிம்மதியாகத் தூங்கக் கூட முடிவதில்லை என அப்பகுதி மக்கள் புகாரளித்த நிலையில் போலீசார் இரவு ரோந்து பணியில்  சோதனை செய்தனர். அப்போது விராட் கோஹ்லிக்கு சொந்தமான பப் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்டதற்காக எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. பெங்களூரில் பப்கள் நள்ளிரவு 1 மணி வரை செயல்பட போலீசார் அனுமதித்துள்ளனர். இருப்பினும், இந்த அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நள்ளிரவு 1.30 மணி வரை செயல்பட்ட விராட் கோலிக்கு சொந்தமான பப் உட்பட மேலும் 3 பப்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.