கார் ஏரியில் கவிழ்ந்து விபத்து - குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு
கர்நாடகா மாநிலம் கு டகு மாவட்டத்தில் கார் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் மூன்று வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
சித்தாப்பூர் அருகே உள்ள படகா பனங்கலாவில் உள்ள ஒரு எஸ்டேட்டில், கார் ஏரியில் கவிழ்ந்த விபத்தில், கார் ஓட்டி வந்த விஜேஷ் (36), அவரது மனைவி பமிதா (35) மற்றும் அவர்களது மூன்று வயது மகள் லியா ஆகியோர் உயிரிழந்ததனர். அந்தக் குடும்பத்தினர் அந்த எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையின் தகவல்படி, மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதன்கிழமை காலை, ஒரு கூர்மையான வளைவுக்கு அருகில் உள்ள ஏரியில் கார் கண்டெடுக்கப்பட்டது, அதில் இருந்த மூவரும் உயிரிழந்திருந்தனர். முதற்கட்ட விசாரணையில், இரவு நேரத்தில் அப்பகுதியில் நிலவிய அடர்ந்த பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் தெளிவு குறைந்திருக்கலாம் என்றும், அதனால் ஓட்டுநர் சாலையைக் கவனிக்கத் தவறி கார் ஏரியில் கவிழ்ந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

