கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்! உடனடியாக கைது செய்ய உத்தரவு

 
கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்! உடனடியாக கைது செய்ய உத்தரவு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அபிஷேக் போரலை பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக கைது செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அபிஷேக் போரெலை உடனடியாகக் கைது செய்யுமாறு கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புகார்தாரரின் தனியுரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, அபிஷேக் போரலின் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை அபிஷேக் போரல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அவரைத் தாக்கி, இதனை வெளியில் சொன்னால் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பிவிடுவேன் என மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்து இருந்தார். இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அபிஷேக் போரல் மறுத்திருந்தார். 

தானும் போரலும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், கடந்த ஆண்டு கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும், அதன் பிறகு அந்த கிரிக்கெட் வீரர் தன்னிடம் இருந்து விலகத் தொடங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருந்தார். போரல் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் தற்போது அதற்கு விருப்பமில்லாமல் இருப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.