பிரதமர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
Sep 6, 2023, 08:17 IST1693968453881

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து பாஜக தொடர்ந்து திட்டம் தீட்டி வரும் நிலையில் , காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க கூடாது என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது . பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இதுகுறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.