Budget 2024 : ஆந்திரா, பீகாருக்கு முக்கியத்துவம்.. முறையே ரூ15 ஆயிரம், ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..

 
Budget 2024 : ஆந்திரா, பீகாருக்கு முக்கியத்துவம்.. முறையே ரூ15 ஆயிரம், ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.. 


பட்ஜெட் 2024ல் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15,000கோடியும், பீகாருக்கு ரூ.26,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  மக்களவையில் வாசித்து வருகிறார். மத்திய பட்ஜெட் 2024-25 இடம்பெற்றுள்ள  முக்கிய அம்சங்கள்: 

ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. முன்பு ரூ.10 லட்சம் வரம்பாக இருந்தபோது கடன் பெற்று, அதை உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவர்கள் புதிய வரம்பின் கீழ் பயன் பெறலாம். 

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும்.

நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். 

பிஹார் மாநிலத்தில் ரூ.26,000 கோடி செலவில் 4 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும். பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள், மருத்துவ உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 

தொழில்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். இவ்வாறாக அமைப்பதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படும். 

பட்ஜெட்

இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர். 

4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். 
 
சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு