எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய வீரர் கைது

 
எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய வீரர் கைது எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்திய வீரர் கைது

சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

பஞ்சாப் மாநிலம் பெரோஜ்பூர் அருகே சர்வதேச எல்லையை கடந்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்ற இந்திய பிஎஸ்எப் வீரர் கைது செய்யப்பட்டார். பி.கே.சிங் என்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக எல்லையை கடந்துள்ளார். பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய வீரரை பத்திரமாக மீட்பதற்காக இந்தியா- பாகிஸ்தான் கொடி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய இருநாட்டு வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளது. பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய வீரர் சீருடை அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது.

ச்


இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பி.கே.சிங்  எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.