கர்நாடக பாஜக மாநிலத் தலைவராக எடியூரப்பாவின் மகன் நியமனம்

கர்நாடக பாஜக மாநிலத் தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா, கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மே மாதம், விஜயேந்திரர் தனது முதல் தேர்தலில் ஷிகாரிபுரா தொகுதியில் 11,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2020 ஆம் ஆண்டில், விஜயேந்திரா பாஜகவின் கர்நாடக பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 2019 ஆம் ஆண்டில் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட நளின் குமார் கட்டீல் இடமிருந்து பதவி பறிக்கப்பட்டது. கர்நாடகாவின் பத்தாவது பாஜக மாநிலத் தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா இருப்பார்.
பாஜக மாநில தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்களான ஷோபா கரந்த்லாஜே, சி.டி.ரவி மற்றும் வி. சுனில் குமார் ஆகியோர் இப்பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் கட்சி முதல் முறையாக எம்.எல்.ஏ.வும், மாநிலத்தின் பல பாஜக தலைவர்களுக்கு இளையவருமான விஜயேந்திரரை தேர்வு செய்தது மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.