மோடி ஜி மீண்டும் பிரதமராக வருவதை உறுதி செய்வதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம்.. பி.எஸ். எடியூரப்பா உறுதி

 
4 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா! நினைத்ததை சாதித்த பாஜக… 

மோடி ஜி மீண்டும் பிரதமராக வருவதை உறுதி செய்வதற்காக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிகபட்ச இடங்களை வெல்வதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.எஸ். எடியூரப்பா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு என் மீது நம்பிக்கை உள்ளது, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மோடி ஜி மீண்டும் பிரதமராக வருவதை உறுதி செய்வதற்காக, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிகபட்ச இடங்களை வெல்வதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம். 

பிரதமர் மோடி

பொதுமக்களின் பதில் பா.ஜ.க.வுக்க சாதகமாக உள்ளது. நாங்கள் அறுதி பெரும்பான்மை பெற்று கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம். இது (ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு) துரதிர்ஷ்டவசமானது.  மற்ற நாடுகளுக்கு குறிப்பாக லண்டன் பயணத்தின் போது ராகுல் காந்தி இதுபோன்ற விஷயங்களை பற்றி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது அறிக்கைகளை யாரும் பாராட்ட மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இங்கிலாந்து பயணத்தின்போது, இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலை எதிர்கொள்கிறோம்  என தெரிவித்தார். மேலும் மத்திய பா.ஜ.க. அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.