பி.ஆர்.எஸ். கட்சி ஆபீஸ் மீது காங். கட்சியினர் தாக்குதல்- தெலங்கானாவில் பரபரப்பு

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகம் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி பி.ஆர்.எஸ். கட்சி அலுவலகத்தில் அக்கட்சி மாவட்டத் தலைவர் காஞ்சர்லா ராமகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் முதல்வர் ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் அரசு குறித்து பல விமர்சனங்கள் செய்தார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் பி.ஆர்.எஸ். கட்சி அலுவலகத்தில் நுழைந்து தாக்குதலில் ஈடுப்பட்டு நாற்காலிகள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த மாவட்டத்தில் அதிக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த தாக்குதலுக்கு முன்னாள் அமைச்சர் ஹரிஷ் ராவ் கடும் கண்டனம் தெரிவித்து முதல்வர் ரேவந்த் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் வரை உடல் ரீதியாகத் தாக்கி வருவதாக ஹரிஷ் ராவ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கூறும் இந்திரா காந்தி ராஜ்ஜியம் இதுதானா? தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தெலுங்கானாவில் இந்திரம்மா ராஜ்ஜியம் என்ற பெயரில் ஒரு குண்டர்கள் ஆட்சி நடந்து வருவதாகவும், மீண்டும் அவ்வாறு நடந்தால் அதற்கு உரிய பாடம் கற்பிக்கப்படும் என்று எச்சரித்தார்.