‘புதிய வகை கொரோனா வைரஸ்’ பிரிட்டன் விமானங்கள் இந்தியா வரத் தடை!

 

‘புதிய வகை கொரோனா வைரஸ்’ பிரிட்டன் விமானங்கள் இந்தியா வரத் தடை!

டிச.31ம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘புதிய வகை கொரோனா வைரஸ்’ பிரிட்டன் விமானங்கள் இந்தியா வரத் தடை!

இங்கிலாந்து நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அங்கு புதிய வகை கொரோனா வைரஸ் பதவி வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக, பிரிட்டனில் இருந்து செல்லும் விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு பல நாடுகளில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘புதிய வகை கொரோனா வைரஸ்’ பிரிட்டன் விமானங்கள் இந்தியா வரத் தடை!

இந்த நிலையில், இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார். அங்கிருந்து வரும் விமானங்களை தடை செய்யுமாறு டெல்லி முதல்வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, நாளை நள்ளிரவு 11:59 முதல் டிச.31 நள்ளிரவு 11:59 வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால், மக்களை காக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.