ஜப்பான் பெண் பயணியிடம் சிறுவனும் இளைஞர்களும் அத்துமீறல் -வைரலாகும் வீடியோ

 
ho

ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பான் பெண் சுற்றுலா பயணியிடம் சிறுவன் மற்றும் இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.  இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 கடந்த எட்டாம் தேதி வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ண பொடிகளை தூவி வண்ணம் கலந்த தண்ணீரை பீச்சி ஹோலி பண்டிகை கொண்டாடினர்.  இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்று இருந்தனர். 


 டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர் வாசிகளுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது ஜப்பானைச் சேர்ந்த பெண் பயணியிடம் இளைஞர்களும் சிறுவர்களும் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 

 அந்த பெண் மீது முட்டையை வீசி,  கன்னத்தில் அறைந்து,  பாலியல் அத்திமீறலில் ஈடுபட  முயற்சித்து இருக்கிறார்கள்.  இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சிலர் வலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது . இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரைக்கும் அந்த வெளிநாட்டு பயணி போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

 ஆனாலும் வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அந்த சுற்றுலா பயணி தற்போது டெல்லியை விட்டு வங்காளதேசம் சென்று விட்டதாகவும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நலமுடன் இருப்பதாகவும் போலீசார் அறிக்கை தெரிவித்து இருக்கிறது.