நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின

 
Parliament

 மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி-களின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

Om Birla

 ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை தொடர்ந்து, சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. இதனால்  நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

rahul

அத்துடன் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட நிலையில் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் நண்பகல் 12  மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.