டெல்லி மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு : அச்சத்தில் பொதுமக்கள்!!

 
ttn

டெல்லி காஸிபூர்  மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

bomb

உலக தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் இன்று பொங்கல் பண்டிகையா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் அச்சுறுத்தல் இருக்கும் போதிலும் மக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பொங்கல் தினத்தை கொண்டாடி வருகின்றனர். 

tn

இந்நிலையில் டெல்லி காஸிபூர் மலர்ச்சந்தை பகுதியில் வெடிகுண்டுகளுடன் கூடிய பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  பையில் இருந்த வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு கண்டறியப்பட்ட இடத்தை சுற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். சந்தையில் வெடிகுண்டை வைத்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   பரபரப்பாக காணப்படும் பூச்சந்தையில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.