ஆந்திராவில் கரை ஒதுங்கிய 9 மீனவர்களின் உடல்கள்

 
s

காசிமேட்டிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களது உடல்கள் ஆந்திராவில் கரை ஒதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை காசிமேட்டிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் மாயமாகினார். 7 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்றவர்கள், டீசல் நிரப்புவதற்காக கடந்த 29 ஆம் தேதி கரை திரும்பி மீண்டும் கடலுக்கு சென்ற நிலையில் மாயமாகினார்.  இந்நிலையில் நிஜாம்பட்டினம் துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில் படகு மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமான நிலையில், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கொத்தபட்டினம் அருகே  9 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. நடுக்கடலில் இருந்தபோது படகு எஞ்சினில் பழுது ஏற்பட்டு  நின்றுள்ளது.  முரசு புயல் ஏற்பட்டபோது படகு புயலில் சிக்கி கவிழ்ந்த நிலையில் அதிலிருந்த ஒன்பது மீனவர்களும் மாயமாக இருந்தனர்.  தற்பொழுது 9 பேரில் உடல்களும் ஆந்திரா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. இந்தத் தகவலால் சென்னை காசிமேடு பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்காமல் தவெக அரசு அலட்சியமாக செயல்பட்டதாக மீனவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமான விவகாரத்தில் அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவருகின்றனர்.