ஒன்றன் பின் ஒன்றாக விழும் பாஜக விக்கெட்டுகள்.. 3,4 தொகுதிகளில் தான் ஜெயிக்கும் - அகிலேஷ் யாதவ் பேச்சு...

 
அகிலேஷ் யாதவ்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக விக்கெட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக விழுகின்றன என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில்  வருகிற பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல்  மார்ச் 7 வரை  7 கட்டங்களாக  சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும், ம் மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  அங்கு ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிளுக்கு  இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே ஆளும்கட்சியான பாஜகவில் இருந்து  கொத்தாக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர் கட்சிக்கு தாவியுள்ளனர்.   

உத்தரப்பிரதேசம் தேர்தல் - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் களப்பணி ஆளும் கட்சியை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.. அங்கு இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட 10 எம்.எல்.ஏக்கள்  பாஜகவில் இருந்து விலகியிருக்கின்றனர். அதில் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மௌரியா, தரம் சிங் சைனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா  உள்ளிட்ட சிலர்  அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடியில் இணைந்தனர்.

அகிலேஷ் யாதவ்

உ.பி.யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அனைவரும் அக்கட்சியில் இணைந்தனர். அப்போது  பேசிய அகிலேஷ் யாதவ், “நாங்கள் சட்டமன்ற தேர்தலுக்காக காத்திருந்தோம். சமாஜ்வாடியும் அம்பேத்கர்வாதியும் இணைந்துள்ளதால் இந்த கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது, இதை யாராலும் தடுக்க முடியாது.  பாஜகவின் விக்கெட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக விழுகின்றன, இருந்தாலும் நமது முதல்வர் ( யோகி ஆதித்யநாத்) கிரிக்கெட் விளையாடத் தெரியாதவர். சுவாமி பிரசாத் மவுரியா கூறியது போல், இந்த முறையும் தன்னுடன் ஏராளமான தலைவர்களை அழைத்து வந்துள்ளார். “ என்று தெரிவித்தார்.

மேலும், உ.பி தேர்தலில் 20 % மக்கள் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.  பாஜகவின் முக்கிய தலைவர்கள் எங்கள் கட்சிக்கு வந்துவிட்டனர். இதன்பிறகு அந்த 20 சதவீதத்தைக்கூட இழக்கும்..  பாஜக நான்கில் மூன்று பங்கு  தொகுதிகளில் ஜெயிப்போம் என கூறி வருகிறது.. வெறும் 4 அல்லது 3  தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும்.” என்று தெரிவித்தார்.