அருணாச்சல் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக

 
மோடி

மதியம் 12 மணிவரை அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக 46 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Image

அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பாஜக 22 தொகுதிகளில் வெற்றி, 24 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேசிய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி,  5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அருணாச்சலில் வெற்றி பெற 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 46 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளதால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சியை பிடிக்கிறது. குறிப்பாக அருணாச்சலில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல் சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ளது. சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில், 31 தொகுதிகளில் எஸ்.கே.எம் முன்னிலையில் உள்ளது.