ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

 
Modi

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளதால், அடுத்து பாஜக ஆட்சி ஒடிசாவில் அமைவதற்கான வாய்ப்புள்ளது.

modi


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  பாஜக கூட்டணி கட்சிகள் இந்திய அளவில் 292 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கூட்டணி 223 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.  மற்ற கட்சிகள் 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. மொத்தம் 543 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 56 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 50 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருப்பதால் நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது.