மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியது பாஜக

 
bjp

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. 

bjp

இந்த நிலையில், பாஜக மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பிரசார வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமரின் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம், வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்ட, ஜல் ஜீவன் திட்டம், அயோத்தி ராமர் கோவில், சந்திரயான் 3 விண்கலம் உள்ளிட்ட திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் மோட்டி தலைமையிலான பாஜக அரசின் பல்வேறு சாதனைகள் குறித்து தகவல்களும் அந்த பிரசார வீடியோவில் இடம்பெற்றுள்ளன.