வாயால் வந்த வினை... கங்கனா ரனாவத்துக்கு பாஜகவில் கட்டுப்பாடு
கட்சியின் கொள்கை குறித்து பேச கங்கனா ரனாவத்துக்கு அனுமதி இல்லை என பாஜக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்றதாக கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்து இருந்தார். போராட்டத்தை தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இல்லையென்றால் பஞ்சாப்பை, வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள் எனவும் கங்கனா ரனாவத் கூறியிருந்தார்.
கங்கனாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறிய கருத்து கட்சியின் கருத்து அல்ல. கங்கனா ரனாவத் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. கட்சி கொள்கை விவகாரத்தில் கங்கனா ரனாவத் அறிக்கை வெளியிட அனுமதியோ அல்லது அதிகாரமோ இல்லை. கட்சிக் கொள்கைகள் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. கங்கனா ரனாவத் எதிர்காலத்தில் இதுபோன்று பேசக்கூடாது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.