பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கு டும்..டும்..டும்...பெண் யார் தெரியுமா?
பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவுக்கும் கர்நாடக இசை பாடகி சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத்துக்கும் வருகிற 04ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதியின் பாஜக எம்பியும் பாஜக இளைஞர் அணியின் தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், தேஜஸ்வி சூர்யாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது. சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் என்பவரை தேஜஸ்வி சூர்யா திருமணம் செய்யவுள்ளார். சிவஸ்ரீ ஸ்தந்த பிரசாத் ஒரு கர்நாடக இசைப் பாடகி மற்றும் பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் படிப்பில் பி.டெக் பட்டம் பெற்றுள்ள சிவஸ்ரீ சென்னைப் பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்திலும், சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் - பாகம் 2ல் கன்னட பதிப்பிற்காக ஹெல்கே நீனு பாடலை பாடியிருந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் வருகிற மார்ச் மாதம் 04ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.