இது யோகி அரசு, உங்கள் வேலையை செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.. உ.பி. காவல்துறையை எச்சரித்த பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பல்யாண்

 
சஞ்சீவ் பல்யாண்

இது யோகி அரசு, உங்கள் வேலையை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்று  உத்தர பிரதேச காவல்துறை அதிகாரிகளை பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பல்யாண் எச்சரித்தார்.

உத்தர பிரதேசம் முசாபர்நகரின் புத்தனா பிளாக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பல்யாண் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் பல்யாண் பேசுகையில், இது யோகி அரசு, உங்கள் வேலையை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்று முசாபர்நகர் காவல்துறை அதிகாரிகளை எச்சரித்தார். அந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. சஞ்சீவ் பல்யாண் பேசுகையில் கூறியதாவது:

யோகி

அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்படும். ஒரே இடத்தில் 50க்கும் மேற்பட்டோர் கூடி போராட்டம் நடத்தினால்,  அங்கு நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும என்பதை காவல்துறையினரிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இது யோகி அரசு காவல் துறை தன் வேலையை கற்றுக் கொள்ள  வேண்டும். யோகி ஜியின் ஆட்சியில் எந்தவிதமான அநாகரீகமான நடத்தையும் ஏற்றுக் கொள்ளப்படாது, அனுமதிக்கப்படாது, இது பா.ஜ.க.வின் ஆட்சி.

உத்தர பிரதேச போலீஸ்

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சஞ்சீவ் பல்யாண் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிலர் வந்து உட்காருகிறார்கள் என்று சொல்லியிருக்கிறேன். சில நேரங்களில் அவர்கள் சாலை மறியல் செய்கின்றனர், சில நேரங்களில் வளர்ச்சி பணிகள் நிறுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் விசித்திரமான சூழல் நிலவுகிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.