தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆப்ரேஷன் கமலா மூலம் ஆட்சி அமைப்போம்- பாஜக

 
bjp

எங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆப்ரேஷன் கமலா மூலமாக ஆட்சி அமைப்போம் என பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Minister Ramesh quits to save BJP govt's blushes

பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி, காங்கிரஸ் கட்சியில் இருந்த போது 2019-ல் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஆட்சியை கவிழ்த்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர். பா.ஜ.க ஆட்சியமைத்த போது எடியூரப்பா தலைமையிலான அரசில், நீர்வளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 

தனது சொந்த தொகுதியில் பாஜக பொதுகூட்டத்தில் பேசும் போது பாஜக கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆப்ரேஷன் கமலா மூலமாக நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று அவர் கூறியுள்ளது கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது, தான் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு செல்ல இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என்றும் எக்காரணம் கொண்டும் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது ஒரு வேலை தொங்கு சட்டசபை அமைந்தால் ஆப்ரேஷன் கமலா மூலமாக நாங்கள் ஆட்சி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சிற்கு பாஜக தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.