தபால் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை!!

 
Modi vs rahul

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.  140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். 

modi

இந்நிலையில் காலை 8:00 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 157 இடங்களிலும் , காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களிலும் பிற கூட்டணி கட்சிகள் 8  இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது . 

modi and rahul

கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.  அதேபோல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தபால் வாக்குகளின் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது . தூத்துக்குடி ,மதுரை, மத்திய சென்னை உள்ளிட்ட பல தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.