ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான விசாரணைகளை தவிர்ப்பது தங்களின் உரிமை என்று ஆம் ஆத்மி கருதுகிறது.. பா.ஜ.க.

 
ஆம் ஆத்மி

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான விசாரணைகளை தவிர்ப்பது தங்களின் உரிமை என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள் என்று அந்த கட்சியை  பா.ஜ.க. தாக்கியுள்ளது.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம்  டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. மணிஷ் சிசோடியா ஜாமீன் கோரி  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வரும் 10ம் தேதி அவரது ஜாமீன் மனு விசாரிக்கப்பட உள்ளது. அதேசமயம், மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி… உத்ரகாண்ட் பா.ஜ.க. முதல்வரை விமர்சித்த சிசோடியா
ஆம் ஆத்மி கட்சியின் எதிர்ப்புக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான விசாரணைகளை தவிர்ப்பது தங்களின் உரிமை என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதன்ஷு திரிவேதி  கூறியதாவது: லோகமான்ய திலகர் சுயராஜ்ஜியப் புரட்சியை தொடங்கினார், ஆனால் எதிர்காலத்தில் ஊழலை தங்கள் பிறப்புரிமை என்று சொல்லும் கட்சிகள் ஆட்சியில் அமரும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். 

 சுதன்ஷு திரிவேதி

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான விசாரணைகளை தவிர்ப்பது தங்களின் உரிமை என்று அவர்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்) கருதுகிறார்கள். நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் அலைகளில் கட்சி பயணிப்பதற்கு முன்,  மற்ற அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஆம் ஆத்மியின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.