2019ல் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னால் சித்தராமையா இருந்தார்.. டாக்டர் சுதாகர்

 
தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: சித்தராமையா

கர்நாடகாவில் 2019ல் அப்போதைய முதல்வர் எச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி  அரசாங்கத்தின் வீழ்ச்சியின் பின்னால் சித்தராமையா இருந்தார் என்று பா.ஜ.க.வின் டாக்டர் சுதாகர் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சுதாகர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், 2018ம் ஆண்டில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்ததுபோது, எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கவலைகளை அப்போதைய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் ஸ்ரீ சித்தராமையாவிடம் சொல்லும்போதெல்லாம், அவர் (சித்தராமையா) எம்.எல்.ஏ.க்களிடம் தனது இயலாமையை  வெளிப்படுத்தி, அரசாங்கத்தில் தனக்கு எந்தக் கருத்தும் இல்லை என்றும், தனது தொகுதி மற்றும் மாவட்ட பணிகள் முடங்கி கிடக்கின்றன என்றும் கூறுவார். 

சுதாகர்

மேலும், 2019 மக்களவை தேர்தல் வரை காத்திருங்கள், மக்களவை தேர்தலுக்கு பிறகு ஒருநாள் கூட எச்.டி. குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசை தொடர அனுமதிக்க மாட்டேன் என்று சித்தராமையா எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்தார். இறுதியில் எங்களில் சிலர் தவிர்க்க முடியாமல் காங்கிரஸிலிருந்து வெளியேறி, இடைத்தேர்தலில் மக்களிடம் திரும்பி சென்று எங்கள் தொகுதிகளில் உள்ள காரியகர்த்தாக்களையும் ஆதரவாளர்களையும் பாதுகாக்க வேண்டியிருந்தது.  

காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் இந்த நடவடிக்கையில் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற உண்மையை சித்தராமையா மறுக்க முடியுமா? என்று பதிவு செய்து இருந்தார். 2018ல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது டாக்டர் சுதாகர் சிக்கபல்லாபூர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 2019ல் இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதே தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டார். இருப்பினும் தோல்வி அடைந்தார்.