தீயாய் வேலை செய்யும் பாஜக அரசு- 3 கோடி வீடு கட்ட திட்டம்

 
மோடி

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இன்று காலை டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. விவசாயிகளுக்கான நிதி வழங்கும், PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டார். 3ஆவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கிஷான் சம்மன் நிதி உதவி திட்டத்திற்கான 17ஆவது தவணைத்தொகைக்கு முதல் கையெழுத்திட்டார்.


இந்நிலையில் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும் ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் 2 கோடி இலவச வீடுகள் குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
...