அல்லா என்ன செவிடா? ஒரே தலைவலியா இருக்கு! பாஜக முன்னாள் முதல்வர் சர்ச்சை பேச்சு

 
மதுரா மசூதி விவகாரத்தில் பா.ஜ.க. சம்பந்தபடவில்லை… அமித் ஷா விளக்கம்

அல்லா என்ன செவிடா? ஒலிபெருக்கியில் எதற்காக இத்தனை சத்தமாக பிராத்தனை செய்கின்றனர் என பாஜக முன்னாள் முதல்வர் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பியுள்ளார். 

சாவர்க்கர்-திப்பு மோதல் விவகாரம்: ``இந்து சமுதாயம் வெகுண்டெழுந்தால்..!" -  பாஜக தலைவர் எச்சரிக்கை | BJP's Eshwarappa warns Muslim community against  anti-national activities ...

கர்நாடகாவில் பசவரராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் வரும் மே மாதத்துடன் பாஜக அரசின் ஆட்சி காலம் முடிவு பெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் தற்போது பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. அதேசமயம் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.  கர்நாடகா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் பாஜக ஈடுபட்டுவருகிறது. 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் நேற்று இரவு பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த போது திடீரென அருகில் இருந்த மசூதியில் இருந்த ஒலிபெருக்கி மூலம் பிராத்தனை செய்யப்பட்டது. அப்போது பேசிய ஈஸ்வரப்பா, இது ஒரு பெரிய தலைவலியாக உள்ளது என்று கூறியது மட்டுமில்லாமல், அல்லா என்ன செவிடா? எதற்காக இத்தனை சத்தமாக ஒலிபெருக்கியில் பிராத்தனை செய்கின்றனர்? ஒலிபெருக்கி வைத்துக்கொண்டு தான் அல்லாவை பிராத்தனை செய்ய வேண்டுமா? இதெல்லாம் தேவையற்ற வேலை விரைவில் இதை அகற்ற உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் என்றார்.