கேரள மக்களுக்கு பாஜக, காங்கிரஸ் எதுவும் செய்யாது - பினராயி விஜயன்

 
tn

கண்ணூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

election commision
கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  கேரள முதல்வர் பினராயி கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியிலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். 

pinarayi

இந்நிலையில்  கண்ணூரில் வாக்களித்த பின் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரள மக்களுக்காக எதுவும் செய்யாது; மத்திய அரசு கேரள மாநிலத்திற்கு நிதி தராமல் மறுத்து வருகிறது என்றார்.