11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

 
FF

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 40க்கு 40 என்ற அபார வெற்றியை பெற்றுள்ளது.  இந்த சூழலில் தேசிய அளவில் பாஜக கூட்டணி 294 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர்  தொகுதியில் பாஜக சார்பில் நின்ற சங்கர் லால்வானி 11 லட்சத்து 75 ஆயிரத்து 92 வாக்குகள் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றுள்ளார்.  

TT

இவர் 12 லட்சத்து 26 ஆயிரத்து 751 வாக்குகள் பெற்ற நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சஞ்சய் எஸ் ஓ லக்ஷ்மன் சொலங்கியை விட 11.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.