தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது- அமித்ஷா

தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய நிதி அமைச்சகத்தின் விதிகள் அடிப்படையில், நிவாரண நிதி எவ்வாறு, எவ்வளவு வழங்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வழங்கும் இலவசங்களுக்கான நிதியை பேரிடர் நிதியில் இருந்து பெற முயற்சிக்கிறீர்கள். தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரில் பிரிவினைவாதம் வரலாறாக மாறிவிட்டது. பாஜகவின் நடவடிக்கையால் ஜம்முகாஷ்மீரில் இருந்த பிரிவினைவாதம் தூக்கி எறியப்பட்டுவிட்டது. ஜம்மு மக்கள் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினைவாதத்துடனான உறவை துண்டித்துள்ளன. பாரதத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இதுபோன்ற அனைத்து குழுக்களும் முன்வந்து பிரிவினைவாதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒன்றுபட்ட பாரதத்தை கட்டியெழுப்பும் பிரதமர் மோடியின் முயற்சிக்கு இது மிகப்பெரிய வெற்றி.
தமிழகத்தில் ஒரு புது வகையான வெள்ளம் ஏற்ட்டுள்ளது, சாராய வெள்ளம். நான் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறேன், 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்ததும் சாராய வெள்ளம் வடிந்துவிடும். இந்த சாராய வெள்ளமும் ஊழல்களும் முற்றிலும் நிறுத்தப்படும்” என்றார்.