மாணவியை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த குரங்கு!

 
குரங்கு

பீகாரில் தனது வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவி பிரியாவை குரங்கு ஒன்று தள்ளிவிட்டதில் மாணவி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

பாதிக்கப்பட்டவர் குரங்குகளிடமிருந்து தப்பிக்க முடியவில்லை (பிரதிநிதி)

பீகார் மாநிலம் சிவனில் 10-ம் வகுப்பு மாணவியான பிரியா குமார் என்ற சிறுமி மாடியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு கூட்டம் அவரை நெருங்கியுள்ளது. குரங்கு கூட்டம் சூழ்ந்து கொண்டதும், தன்னை காப்பற்றிக் கொள்ள அங்குமிங்கும் ஓடியுள்ளார் பிரியா. ஆனால் கூரையிலிருந்து தள்ளி, குரங்குகள் ஓங்கி தாக்கியதில் பிரியா கீழே விழுந்து உயிரிழந்தார். 

கீழே விழுந்தவுடன் பிரியாவின் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. மயக்கமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அவளை சிகிச்சைக்காக சிவன் சதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.