‘பாரத பிரதமர்’ சர்ச்சையை கிளப்பும் அடுத்த அழைப்பிதழ்

 
பாரத பிரதமர்

கடந்த 2 நாட்களாக சனாதன ஒழிப்பு விஷயத்துக்கு போர்க்கொடி தூக்கிக்கொண்டிருந்த பாஜக, தற்போது புதிய பிரச்சனையை கையில் அடுத்துள்ளது.

Image

இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் G-20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மற்றும் இந்தியா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்லும் நிலையில், அது தொடர்பான அறிவிப்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Image

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கினார். ஒரு நாட்டின் பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்தியா என்ற நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற வேண்டும் என முடிவு செய்திருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜக தங்களை கண்டு பயத்தில் இதுபோன்று செய்வதாகவும், 9 ஆண்டுகளில் இந்தியாவின் பெயரை மற்றுமே பாஜகவால் மாற்ற முடிந்திருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றனர்.