ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

 
death

தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில்  கோதாவரியில் ஆற்றில் குளிக்க சென்ற எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பிடெக் மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Swimming Accidnet

ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள  எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஏழு மாணவர்கள் சுற்றுலாவுக்காக தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் சென்றனர். அவர்கள் பத்ராசலம் - கூனவரம் சாலையில் உள்ள ஒரு மணல் சரிவுப் பகுதியில் கோதாவரி ஆற்றின் அழகைக் காணச் சென்று கோதாவரியில் குளிப்பதற்காக இறங்கினர். ஆற்றின் ஆழம்  கணிக்கப்படாததாலும், நீரோட்டம் அதிகமாக இருந்ததாலும், ஐந்து இளைஞர்கள் கோதாவரியில் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு  மூழ்கினர். இருப்பினும், மற்ற இருவர் சுதாரித்து கொண்டு உயிர் தப்பினர். அவர்கள் சத்தம் கேட்டு  அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில்  மேற்கொண்டனர். 

மேலும் இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஆந்திர மாநிலம் உய்யூரை சேர்ந்த  கோக தேஜா, நவ்தீப், அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்த பாசம் சதீஷ்குமார், தெலுங்கானா மாநிலம் பத்ராசலத்தை சேர்ந்தசருகுண்ட்லா ஸ்ரீகர், பொடிசெட்டி அபிராம் ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். போலீசார்  வழக்குப் பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.