பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும் - சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றுவதாக கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனை தொடர்ந்து மன் மோகன் சிங்கின் பெயரை இந்திய கல்வி நிறுவனங்களுக்கு சூட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவர் சங்கத்தின் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றுவதாக கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சரும், நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் மன்மோகன் சிங் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.