’குண்டான நபர்’- வாடிக்கையாளரை உருவ கேலி செய்த கஃபே நிறுவனம்

 
ச்

விற்பனை ரசீதில் வாடிக்கையாளரை உருவ கேலி செய்த கஃபே நிறுவனத்தின் செயல் சமூக வலைதளத்தில் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

 Bengaluru man gets body-shamed on bill from restaurant, company responds (Photo: r/BangaloreSocial/Reddit)

பெங்களூருவில் பிரபல காபி நிறுவனமான SUBKO-வில் வாடிக்கையாளரின் பெயருக்கு பதிலாக பில்லில் ’குண்டான நபர்’ என அச்சிட்டு வழங்கியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் REDDIT ல் பதிவிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டடுடன், வாடிக்கையாளரிடம் SUBKO நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது. மீண்டும் இதுபோல் நடைபெறாத வகையில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் கோரமங்களாவில் உள்ள ‘சுப்கோ தி கிராஃப்டரி’க்குச் சென்று, உணவை ஆர்டர் செய்து, கட்டணத்தைச் செலுத்திய பின்னரே, ரசீதில் உள்ள வாடிக்கையாளர் விவரங்களின் கீழ் தனது பெயருக்குப் பதிலாக 'குண்டான கருப்புச் சட்டை அணிந்த மனிதர்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததை கவனித்ததாகக் கூறினார். பாதிக்கப்பட்ட நான்,  ஒரு ஆண் என்பதால் மட்டுமே, உடல் கேலியை ஒரு நகைச்சுவையாகக் கருதி ஒதுக்கிவிடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.