வீரப்பன் பற்றிய வெப் சீரிஸை வெளியிட பெங்களூரு நீதிமன்றம் தடை

 
நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது…  ஒதுக்கப்பட்ட நிதி எங்கே?

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஏ எம் ஆர் ரமேஷ் வீரப்பன் குறித்து உருவாக்கிய "வீரப்பன் - கொலைக்கான பசி" என்ற வெப் சீரிஸ் வெளியிட பெங்களூரு 12 வது முதன்மை அமர்வு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீரப்பன் பற்றிய வெப் சீரிஸை வெளியிட பெங்களூரு நீதிமன்றம் தடை .! |  Dinasuvadu Tamil

வீரப்பன் குறித்து "வீரப்பன் - கொலைக்கான பசி" என்ற வெப் சீரிஸை பெங்களூருவை சேர்ந்த இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆன ஏ எம் ஆர் ரமேஷ் அண்மையில் உருவாக்கி வருகிறார். இந்த வெப் சீரிஸ் இந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வரும் ஜுலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று நக்கீரன் இதழின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் கோபால் சார்பில் பெங்களூருவில் உள்ள 12 வது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நக்கீரன் கோபால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடேசன் நீதிபதியிடம் வீரப்பனை சந்தித்து போராடி ராஜ்குமாரை மீட்ட செய்தியாளர் கோபால்.

வீரப்பனை பலமுறை சந்தித்து மீட்பு பணியை நிறைவேற்றியது மட்டுமில்லாமல் வீரப்பன் குறித்து முழு தகவலையும் இந்த உலகுக்கு தகவல் அளித்தவர். இயக்குனர் எனது கட்சிக்காரரிடம் தொடர்பு கொண்டு இதுவரை வீரப்பன் குறித்து உண்மையான தகவல்களை பெறவில்லை. ஆகையால் ரமேஷ் உருவாக்கி வரும் வீரப்பன் குறித்த வெப் சீரிஸில் எனது கட்சிக்காரர் குறித்து பல அவதூறு செய்திகள் இடம் பெற்றுள்ளன என சந்தேகம் எழுந்துள்ளது. 

Tamil News | வீரப்பன் வேட்டை: ஏக்கத்தை வெளிப்படுத்தினார் விஜயகுமார் |  Dinamalar

இதன் காரணமாக இந்தப் வெப் சீரிஸை முழுவதுமாக தனது கட்சிக்காரருக்கு திரையிடப்பட்டு காண்பிக்க வேண்டும் அதன் பிறகு தான் இதை வெளியிட வேண்டும் அதுவரை இந்த வெப் சீரிஸ் திரையிட உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் நடேசன் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுதாரர் கோபால் அவரிடம் புதிதாக எடுக்கப்பட்டுள்ள வெப் சீரஸ் முழுவதுமாக அனைத்து மொழிகளிலும் போட்டுக் காண்பிக்கப்பட்ட பிறகு திரையிடப்பட வேண்டும் என்றும் அதுவரை இந்த படத்தை வெளியிட தற்காலிக தடை விதிப்பதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவைத் திறந்த நிலையில் நக்கீரன் தலைமையாசிரியர் கோபால் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்று புத்தகம் வெளியிட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.