ரேபிடோவில் ஏன் புக் செய்கிறாய்? இளைஞர் மீது ஆட்டோவை ஏற்றிய நபர்

 
Bengaluru Auto Driver Allegedly Knocked Down A Techie For Booking A Rapido Bike Taxi

பெங்களூருவில் ரேபிடோ பைக்கில் பயணம் செய்ய காத்திருந்த ஐடி நிறுவன ஊழியர் மீது ஆத்திரத்தில் ஆட்டோவை ஏற்றி தாக்குதல் நடத்திய ஆட்டோ ஓட்டுனரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Bengaluru Auto Driver Allegedly Knocked Down A Techie For Booking A Rapido  Bike Taxi

பெங்களூர் நகரின் எச்.ஆர்.லே அவுட் பகுதியில் அசார்கான் என்ற ஐடி நிறுவன ஊழியர் கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு, தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஆன்லைன் செயலி மூலமாக வாடகைக்கு இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்து இருக்கிறார். அவர் வாகனத்திற்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். 

அதற்கு அசார் கான், தான் இ ராப்பிடோ-பைக்கை புக் செய்திருப்பதாகவும், வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆட்டோ டிரைவர், நீங்கள் அனைவரும் இவ்வாறு  வாடகை இருசக்கர வாகனத்தில் சென்றால் ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி பிழைப்பு நடத்துவது ? ன்று கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. 

எஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த அசார் கான் மீது தனது ஆட்டோ வால் முட்டிக் கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சட்டென கிளம்பி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசார் கான் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.