திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு- ஆய்வில் உறுதி

 
திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி மற்றும் மீன் கொழுப்பு கலக்கப்பட்டது உறுதி செய்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே அனைவரும் சுவாமி தரிசனத்திற்கு பிறகு மிகவும் விருப்பப்பட்டு வாங்கி செல்வது லட்டு பிரசாதம். ஆனால் இந்த லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் இந்த முறைகேட்டின் மூலம் நெய் சப்ளை செய்தவர்கள் அதில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

sg

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் இதற்கு முன்பு வாங்கப்பட்ட நிறுவனத்துடன் இருந்து நெய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையில்  நெய்யில் 37 சதவீதம் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆய்வறிக்கை ஜெகன் மோகன் ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கி  பெறப்பட்ட நெய்யில்  சோயா பீன், சூரியகாந்தி, ஆலிவ், ராப்சீட், ஆளி விதை,  பருத்தி விதை, மீன் எண்ணெய், பாமாயில் மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு பிரசாதம்..ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வருமா?  தேவஸ்தானம் சொல்வதென்ன? | Tirupati Laddu Prasadam Does it come home if  ordered online? - Tamil Oneindia

ஏற்கனவே இந்த நெய் சப்ளை செய்த நிறுவனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆய்வு அறிக்கை அடிப்படையில் இனி அந்த நிறுவனம் ஒப்பந்தத்தில் பங்கேற்காத வகையில் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனம் தேவஸ்தானத்திற்கு செலுத்திய முன் வைப்பு தொகை திரும்ப தர முடியாது என தெரிவிக்கப்பட்டிருப்பதோடு அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும் தேவஸ்தானம் திட்டமிடப்பட்டுள்ளதாக செயல் அதிகாரி ஷியாமளாராவ் இதற்கு முன்பே  தெரிவித்துள்ளார்.