கர்நாடக தேர்தலில் தோல்வி - ராஜினாமா செய்கிறார் பொம்மை?!

 
tn

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த மே 10ம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது.  இதில் காங்கிரஸ், பாஜக ,மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பெரும் கட்சிகள் மோதிக்கொண்டன.  இதையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கியது. ஆரம்பம் முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகுத்து வருகிறது . ஆளும் பாஜக 65 இடங்களிலும்,  மதசார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ttn

இந்த சூழலில் இத்தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,  பிரதமர் நரேந்திர மோடி ,பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறி விட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்ய பசவராஜ் பொம்மை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க பசவராஜ் பொம்மை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.