ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? – உண்மை நிலவரம் என்ன?

 

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? – உண்மை நிலவரம் என்ன?

ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை தினங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமாக சேர்த்து 15 நாட்கள் விடுமுறை தினங்களாக வருகின்றன. இந்த பொத்தாம்பொதுவான அறைகுறையான செய்தியால் மக்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் சற்று கலக்கமடைந்துள்ளனர். உண்மையாகவே 15 நாட்கள் விடுமுறை தானா? ஆம் 15 நாட்கள் விடுமுறை தான். ஆனால் இந்தியா முழுமைக்குமான பொது விடுமுறையாக அது இருக்காது.

Coronavirus threatens India's banking recovery before it even starts |  Financial Times

குறிப்பிட்ட மாநிலங்கள், நகரங்கள் என சில பகுதிகளில் திருவிழாக்கள் வருவதால் பண்டிகைக் கால விடுமுறையாக அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வங்கிகள் செயல்படாது. மற்றபடி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வங்கி சேவைகள் தடையின்றி மக்களுக்கு கிடைக்கும். முதலில் நாடு முழுவதுமான பொது விடுமுறை இரு தினங்களில் வருகிறது. ஒன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி மொஹரம் பண்டிகை. இன்னொன்று ஆகஸ்ட் 30ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி. இரு விழாக்களும் அனைவருக்கும் பொதுவானது என்பதால் இந்த இரு நாட்களில் வங்கிகள் செயல்படாது.

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? – உண்மை நிலவரம் என்ன?

இதில் குறிப்பாக ஐந்து ஞாயிறுக்கிழமைக்கான வழக்கமான விடுமுறைகளும் அடங்கும். முதல் ஞாயிறு விடுமுறை இன்று முடிந்துவிட்டது. இதுதவிர 2ஆம் மற்றும் 4ஆம் சனிக்கிழமை வார விடுமுறையும் உண்டு. இவை தவிர ஏனைய விடுமுறை நாட்கள் பலவும் உள்ளூர் மற்றும் குறிப்பிட்ட நகரங்கள், மாநிலங்களுக்கான விடுமுறையாகவே அமைந்துள்ளன. மொத்தமாக 8 நாட்கள் பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் மத ரீதியான விழாக்கள், கொண்டாட்டங்களானவை. அதற்கும் நமக்கு துளியும் சம்பந்தமில்லை என்பதால் தங்கு தடையின்றி வங்கி சேவைகளை தமிழர்கள் பெறலாம்.