டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறையா? முக்கிய தகவல் இதோ!!

 
bank

நவம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டிசம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை இந்த செய்தி குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.

bank

பொதுவாக வங்கிகள் இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை,  நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் அந்த வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே கணக்கிட்டு செய்து கொள்வார்கள் என்பதால் தான்.

bank

டிசம்பர் 3, 2021 அன்று, புனித பிரான்சிஸ் சவேரியாரின் பண்டிகையை முன்னிட்டு கோவா பனாஜியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

டிசம்பர் 18, 2021 அன்று, யு சோசோ தாம்  நினைவு தினம் காரணமாக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை 

டிசம்பர் 24, 2021 அன்று, கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு  மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மற்றும் மேகாலயா ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

டிசம்பர் 25, 2021 அன்று, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து நகரங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை 

டிசம்பர் 27, 2021 அன்று, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் காரணமாக  ஐஸ்வாலில் வங்கிகளுக்கு உள்ளூர் விடுமுறை 

டிசம்பர் 30, 2021 அன்று, சுதந்திர போராட்ட வீரர் யு கியாங் நாக்பா நினைவுதினத்தையொட்டி  ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை 

டிசம்பர் 31, 2021 அன்று, புத்தாண்டு தினத்தன்று ஐஸ்வாலில் வங்கிகளுக்கு விடுமுறை 

மேலே குறிப்பிடப்பட்ட விடுமுறை நாட்களைத் தவிர, இரண்டாவது சனிக்கிழமை காரணமாக டிசம்பர் 11, 2021 மற்றும் நவம்பர் 27, 2021 ஆகிய தேதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். நான்காவது சனிக்கிழமை டிசம்பர் 25, 2021,  ஞாயிற்றுக்கிழமைகள் என்பதால் டிசம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆன்லைன் வங்கி சேவைகள் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து செயல்படும் நிலையில் இந்த நாட்களில் ஏடிஎம்கள், மொபைல் பேங்கிங் வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.