வங்கதேச விவகாரம்: டெல்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்..

 
வங்கதேச விவகாரம்: டெல்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்..  வங்கதேச விவகாரம்: டெல்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்.. 

வங்கதேசத்தில் நிகழும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூடியுள்ளது.  

வங்கதேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்த நிலையில், தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.  நிலைமை எல்லைமீறிச் செல்லவே, ராணுவத்தின் உதவியுடன் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா  உயிரை கையில் பிடித்துக்கொண்டு ராணுவ உதவியுடன் நேற்று இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். தொடர்ந்து அந்நாட்டு தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களிடம் உரையாற்றிய ராணுவ தளபதி வேகர் - உஜ் -ஜமன், ஷேக் ஹசினா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் , இடைக்கால அரசு அமைக்கப்போவதாகவும்  அறிவித்தார். சலிமுல்லா கான் இடைக்கால அரசின் பிரதமராக செயல்படுவார் எனவும், ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகள் 10 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.  

வங்கதேச விவகாரம்: டெல்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்.. 

இந்நிலையில் இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனாவை , ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர் விரைவில் லண்டன் அல்லது பெலாரஸ் நாட்டுக்குச் செல்வார் என கூறப்படுகிறது. அவர் இந்த நிலையில் வங்கதேச சூழல் குறித்தும், அந்நாட்டு பிரதமர் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் இருப்பதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்   பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பது குறித்தும், வங்கதேசத்தில் நிகழும் அரசியல் மாற்றம், கல்வரம் குறித்தும்  நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க இருக்கிறார். இதற்கான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது கூடியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,  மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.