வங்கதேச விமான விபத்து- 19 பேர் பலி

 
வங்கதேச விமான விபத்து- 19 பேர் பலி வங்கதேச விமான விபத்து- 19 பேர் பலி

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே பள்ளி வளாகத்தில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேச விபத்து


வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி வளாகத்தில்  விமானப்படையின் பயிற்சி விமானமான F-7 BGI  இன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் விழுந்து தீப்பிடித்தது. விமானம் ஒரு கட்டிடத்தின் பக்கவாட்டில் மோதியதால், அதன் சுவர்கள் மற்றும் இரும்பு கிரில்களுக்கு சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

டாக்காவில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளி வளாகத்தில் மோதிய வங்கதேச விமானப்படை பயிற்சி விமானத்தின் இடத்தில் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றுகின்றனர். (AP/PTI)


இச்சம்பவத்துக்கு இரங்கல் கூறியுள்ள வங்க தேச பிரதமர் முகமது யூனுஸ், “இன்று அம்பஸில் பங்களாதேஷ் விமானப்படையின் F-7BGI பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான துயர விபத்து குறித்து எனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் விமானப்படை மற்றும் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பிறருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும், அனைத்து வகையான உதவிகளையும் உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.