டெல்லி மதுபான கொள்கை ஊழலுக்கும் தெலங்கானா மக்களுக்கும் என்ன சம்பந்தம்?.. கவிதாவிடம் கேள்வி எழுப்பிய பா.ஜ.க.

 
வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக ஒவைசி, பண்டி சஞ்சய் குமாருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு..

டெல்லி மதுபான கொள்கை ஊழலுக்கும் தெலங்கானா மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெலங்கான முதல்வரின் மகளும் கவிதாவிடம் அம்மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் கேள்வி எழுப்பினார்.

தெலங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: டெல்லி மதுபான கொள்கை ஊழலுக்கும் தெலங்கானா மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் நான் கேட்கிறேன். தெலங்கானா மக்களின் நலனுக்காக கவிதா சட்டவிரோத மதுபான பேரத்தில் ஈடுபட்டாரா?. அதில் முறைகேடாக சம்பாதித்த பணம் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அல்லது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அல்லது வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகையாக வழங்க செலவிடப்படுகிறதா?. 

கவிதா

தெலங்கானா மக்கள் ஒருபோதும் வெட்கித் தலைகுனிய வேண்டியதில்லை என்றாலும், மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் குற்றச்சாட்டில் வெளிச்சத்தில் அவர்கள் இப்போது அவ்வாறு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர். மதுபான ஊழலில் கவிதாவின் விக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது. விரைவில் பி.ஆர்.எஸ். கட்சியில் உள்ள பலர் கிளீன் பவுல்டு செய்யப்படுவார்கள். மதுபான ஊழல் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை காப்பாற்றுவது என்ற கேள்விக்கே இடமில்லை. 

கே.டி.ராம ராவ்

தெலங்கானாவில் கே.சந்திரசேகர் ராவ் ஆட்சியில் பெண்கள் அவமதிப்புக்கும் மற்றும் அவமானங்களுக்கும் ஆளாகிறார்கள். தனது சீனியரால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ப்ரீத்தியின் குடும்ப உறுப்பினர்களை பார்க்க கே.சந்திரசேகர் ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவுக்கு நேரமில்லை. ஆனால் சானியா மிர்சாவின் பிரியாவிட டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கே.டி. ராமராவுக்கு நேரம் கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.