கடவுளின் பரிசு.. சிறுமியின் back flip சாதனை: வைரலாகும் வீடியோ
Apr 20, 2021, 22:03 IST1618936438000
ஐந்து சிறுமி ஒருவர் back flip செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒருமுறை இருமுறையோ செய்திருந்தால் கூட ஐந்து வயது சிறுமியின் சாதனை என்றுதான் சொல்லுவார்கள். ஆனால், இந்த சிறுமி 80 முறை back flip செய்து அசத்தி இருக்கிறார்.
வீடியோவை பார்க்கும்போது தலைசுற்றத்தான் செய்கிறது நமக்கு. அந்த அளவுக்கு வேகமாக அந்த சிறுமி back flip செய்வதை பார்த்தால் எவராலும் வியக்காமல் இருக்க முடியாது. அதனால்தான் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தமிழக பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் இந்த வீடியோவினை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ’’ஆஹா அவள் உலகத்தை சூரியனைச் சுற்றுவது போல சுழல்கிறாள். கடவுளின் பரிசு கடவுள் ஆசீர்வதிப்பார்.’’என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்.