அயோத்தி ராமர் கோவில் மேற்கூரையில் கசிவு - புகாரும், விளக்கமும் ...!!

 
gg

அயோத்தி ராமர் கோவில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.  கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சாரியா சத்தியேந்திர தாஸ் கோயிலில் மேற்கூரை மழையின் போது ஒழுகுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

ggg 

பாலராமர் இருக்கும் கருவறையின் மேற்கூரை ஒழுகுவதாக கூறியுள்ள அவர்,  இது ஆச்சரியமளிக்கிறது.  மேற்கூரையிலிருந்து தண்ணீர் வடிய இடமில்லை.  ஆனால் இது தொடரும் பட்சத்தில் கன மழை பெய்தால் பக்தர்கள் வழிபடுவது சிரமம் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.  

ஆச்சார்யா சத்யேந்தர தாஸ் - நிருபேந்திர மிஸ்ரா

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிரூபேந்திர மிஸ்ரா,  முதல் தளத்திலிருந்து மழை நீர் சொட்டுவதை நானே பார்த்துள்ளேன். இரண்டாம் தளமாக உள்ள குரு மண்டபத்திற்கு மேற்கூரை இல்லாததால் மழை நீர் சொட்டுகிறது.  கட்டுமான பணிகள் நிறைவடையும்போது தண்ணீர் கசிவு நின்றுவிடும்.  அனைத்து தளங்களிலும் தண்ணீர் வடிவதற்கான சூழல் இருப்பதால் வடிகால்கள் இல்லை. கட்டுமான திட்டத்தில் குறைகள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.