முதன்முறையாக ரயிலில் ஏடிஎம் வசதி!

 
n

விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, ரயிலில் ஏடிஎம் மெசின் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்தால், ரயில்களில் இதுபோன்ற மேலும் பல ஏடிஎம்கள் திறக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


நாட்டிலேயே முதன்முறையாக இந்திய ரயில்வே ஒரு ரயிலில் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தை (ATM) நிறுவியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மன்மாட்-சிஎஸ்டி பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 10 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.



"ஏடிஎம் ஆன் வீல்ஸ்" என்று அழைக்கப்படும் இந்த முயற்சி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மினி பேன்ட்ரி பகுதியை, ரயில்வேயின் இயந்திரக் குழு, ஏடிஎம்க்கான பாதுகாப்பான பெட்டி அறையாக மாற்றியுள்ளது. அதிர்வுகளால் சேதமடைவதைத் தவிர்க்க ஏடிஎம் போல்ட் செய்யப்பட்டு ரப்பர் பேட் செய்யப்பட்டுள்ளது, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் அருகில் இரண்டு தீயணைப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை வெற்றியடைந்தால், எதிர்காலத்தில் ரயில்களில், குறிப்பாக நீண்ட தூர வழித்தடங்களில் இதுபோன்ற ஏடிஎம்கள் ரயில்களில் வைக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.